1. Udyam Registration என்றால் என்ன?
Udyam Registration என்பது Ministry of MSME அறிமுகப்படுத்திய official government registration process, உங்க business-ஐ Micro, Small அல்லது Medium Enterprise (MSME) ஆக legally recognize பண்ணும். இது பழைய Udyog Aadhaar system-ஐ replace பண்ணிருக்கு.
2026-ல் பல banks, government tender portals, buyer-side MSME payment systems Udyog Aadhaar Memorandum-ஐ ஏற்றுக்கொள்வதில்லை. Udyog Aadhaar மட்டும் இருந்தா, immediate ஆ Udyam-க்கு migrate பண்ணிக்கோங்க.
2. MSME Classification (2026 Updated Limits)
Union Budget 2025-26-ல் investment மற்றும் turnover limits revise பண்ணப்பட்டு, 1st April 2025 முதல் effective ஆ இருக்கு. Investment (Plant & Machinery/Equipment cost — land, buildings, pollution-control equipment சேர்க்கக்கூடாது) மற்றும் Turnover (GSTR/ITR-ல் இருக்கிற annual sales, export turnover விலக்கி) — ரெண்டு criteria-வையும் business கடக்கவேண்டும் அந்த category-ல் வர.
Micro/Small/Medium-க்கான exact ₹ limits periodic ah revise ஆகும் — Udyam Registration Portal-ல் latest classification limits verify பண்ணிக்கோங்க, illa Ramya-கிட்ட கேளுங்க.
3. தேவையான Documents
Udyam Registration-ஓட biggest advantage — முற்றிலும் Paperless! எந்த ஒரு physical document-ம் upload பண்ண தேவையில்லை, Self-Declaration model-ல் இயங்குது.
- Aadhaar Number: Proprietorship-க்கு owner-ஓட Aadhaar, Company/Partnership-க்கு authorized signatory-ஓட Aadhaar, mobile-ஓடு linked ஆ இருக்கணும் (OTP verification-க்கு).
- PAN & GSTIN: Compulsory. System உங்க PAN/GST-ஓட linked details-ஐ automatic ஆ auto-fetch பண்ணிக்கும்.
- Bank Account Details: Registration நேரத்தில் compulsory இல்லை, ஆனா loan/subsidy apply பண்ண பிற்பாடு தேவைப்படலாம்.
4. Step-by-Step Online Registration Process
Official Portal-ஐ Open பண்ணுங்க
udyamregistration.gov.in — இது தான் ஒரே official government website. வேற எந்த website/app-ம் official இல்ல, கவனமா இருங்க.
"New Entrepreneurs" Link Select பண்ணுங்க
Aadhaar number மற்றும் entrepreneur name (Aadhaar-ல் இருக்கிற பேர் அப்படியே) enter பண்ணுங்க.
OTP Verification
Aadhaar-linked mobile number-க்கு OTP வரும், அதை enter பண்ணி verify பண்ணுங்க.
PAN & GST Validation
PAN enter பண்ணினா system உங்க PAN/GST-linked details-ஐ auto-fetch பண்ணும்.
Business Details Fill பண்ணுங்க
Business name, location, address, bank details, investment, turnover, மற்றும் NIC Code (Nature of Business Activity) fill பண்ணுங்க. Correct NIC Code select பண்றது romba important — wrong code select பண்ணா scheme eligibility மற்றும் loan approvals delay ஆகலாம்.
Final Submit & OTP
"Final Submit" கிளிக் பண்ணி, கடைசி OTP enter பண்ணுங்க. "Thank You" message-ஓடு உங்க புதிய 19-digit Udyam Registration Number (URN) கிடைக்கும்.
Usually 10-15 நிமிடங்களில் online-ல complete ஆகும். URN உடனே generate ஆகும், Certificate 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும். Government Fee: ஜீரோ — முற்றிலும் இலவசம். Lifetime validity — expiry இல்ல, ஆனா annual ஆ turnover/investment update பண்ணணும்.
5. Udyam Registration Benefits
- Collateral-free loans மற்றும் lower interest rates-க்கு eligibility
- Priority Sector Lending மற்றும் Government-backed Credit Guarantee Schemes
- Government tenders-ல் participate பண்ணும் தகுதி (GeM Portal மூலம்)
- ISO Certification cost-க்கு government reimbursement
- Delayed payment protection — buyers late payment பண்ணா legal protection
6. Common Mistakes தவிர்க்க வேண்டியவை
- தவறான NIC Code select பண்றது — loan approval delay ஆகும்.
- ITR-ஓடு match ஆகாத turnover fill பண்றது — future-ல penalty/audit issue வரலாம்.
- Mobile number Aadhaar-ஓடு link ஆகாம OTP fail ஆவது.
- Annual update skip பண்றது — registration status suspend ஆகலாம்.
- ஒரே business-க்கு multiple registrations create பண்றது.
