Free Advice
🏠 Home 📝 All Articles 🧮 SIP Calculator 👤 About 💬 WhatsApp Free Advice
📈 Share Market Basics

Share Market என்றால் என்ன? Beginners-க்கான Complete Tamil Guide

பங்குச்சந்தை-னா என்ன? NSE, BSE-னா என்ன? Mutual Fund-க்கும் Share Market-க்கும் என்ன வித்தியாசம்? ரொம்ப Simple-ஆ தமிழில் புரிஞ்சுக்கலாம் வாங்க.

Vignesh Dhayalan
Vignesh Dhayalan
AMFI MFD · ARN 288927
📅 May 2026
8 min read
💡 Basic Guide
Share Market in Tamil

📊 Share-னா என்ன? ஒரு Simple Example

Share Market பத்தி தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி "Share" அப்படின்னா என்னன்னு ஒரு simple example வச்சு புரிஞ்சுக்கலாம்.

உங்க friend ஒரு Supermarket ஆரம்பிக்கணும்னு நினைக்கிறாரு. அதுக்கு ₹10 லட்சம் தேவைப்படுது. ஆனா அவருகிட்ட ₹5 லட்சம் தான் இருக்கு. மீதி ₹5 லட்சத்துக்கு உங்களை Partner-ஆ கூப்பிடுறாரு. நீங்க ₹5 லட்சம் கொடுத்தா, அந்த Supermarket-ல நீங்க 50% Owner ஆகிடுவீங்க. அதாவது அந்த Business-ல 50% "Share" உங்களுக்கு இருக்கு.

💡 Share (பங்கு) என்றால் என்ன?

இதே மாதிரி, பெரிய பெரிய கம்பெனிகள் (உதாரணத்துக்கு Tata, Reliance, HDFC) தங்களோட Business-ஐ further-ஆ develop பண்ண public-கிட்ட இருந்து காசு கேப்பாங்க. நாம அவங்களுக்கு காசு கொடுத்து, அந்த கம்பெனியோட ஒரு சின்ன பகுதிக்கு Owner ஆகுறோம். அதுக்கு பேருதான் 'Share' அல்லது 'Stock'.

🏢 Share Market (பங்குச்சந்தை) என்றால் என்ன?

காய்கறி வாங்கணும்-னா நாம Market (சந்தை) போவோம் இல்லையா? அங்க காய்கறி விக்கிறவங்களும் இருப்பாங்க, வாங்குறவங்களும் இருப்பாங்க.

அதே மாதிரி, கம்பெனியோட Shares-ஐ வாங்குறவங்களும், விக்கிறவங்களும் சந்திக்கிற இடத்துக்கு பேருதான் Share Market (அல்லது Stock Market). நீங்க Share market-ல ஒரு கம்பெனியோட share-ஐ வாங்கும்போது, யாரோ ஒருத்தர் அதை விக்கிறாருன்னு அர்த்தம்.

🏛️ NSE மற்றும் BSE என்றால் என்ன?

இந்தியாவில் shares-ஐ வாங்கி விக்க முக்கியமா ரெண்டு பெரிய Exchanges (சந்தைகள்) இருக்கு:

  • BSE (Bombay Stock Exchange): இதுதான் Asia-வோட oldest stock exchange. இது மும்பையில் இருக்கு. இதில் கிட்டத்தட்ட 5000+ கம்பெனிகள் list ஆகியிருக்கு.
  • NSE (National Stock Exchange): இது இந்தியாவின் மிகப்பெரிய stock exchange. இதுவும் மும்பையில் தான் இருக்கு. Volume-ல (அதாவது transactions நடக்குற அளவுல) NSE தான் அதிகம்.

எப்படி Koyambedu market, KR market-னு ஊருக்கு ஊரு பெரிய காய்கறி market இருக்கோ, அதே மாதிரிதான் Share market-ல NSE மற்றும் BSE!

📈 Nifty 50 & Sensex - Market Indexes

நியூஸ்ல தினசரி "இன்னைக்கு சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்தது" அப்படின்னு சொல்றதை கேட்டிருப்பீங்க. அதோட அர்த்தம் என்ன?

Sensex (சென்செக்ஸ்)

BSE-ல இருக்கிற 5000+ கம்பெனிகள்ல, மிக முக்கியமான Top 30 கம்பெனிகளின் average performance-ஐ காட்டுற ஒரு Index தான் Sensex. இந்த 30 கம்பெனிகள் நல்லா perform பண்ணா Sensex ஏறும், இல்லனா இறங்கும்.

Nifty 50 (நிஃப்டி 50)

NSE-ல இருக்கிற ஆயிரக்கணக்கான கம்பெனிகள்ல, மிக முக்கியமான Top 50 கம்பெனிகளின் average performance-ஐ காட்டுற Index தான் Nifty 50. இந்திய பொருளாதாரம் எப்படி போகுது-னு தெரிஞ்சுக்க இது ஒரு indicator-ஆ பயன்படுது.

📲 Share Market-ல Invest பண்ண என்ன தேவை?

உங்ககிட்ட சும்மா காசு இருந்தா நேரடியா போய் Reliance share குடுங்க-னு வாங்க முடியாது. நீங்க Share Market-ல invest பண்ண உங்களுக்கு 3 Accounts தேவை:

  • Bank Account: உங்க பணத்தை store பண்ணி வைக்கிறதுக்கு (எல்லார்கிட்டயும் இது இருக்கும்).
  • Trading Account: Stock exchanges-ல shares-ஐ வாங்குவதற்கும், விற்பதற்கும் (Buy/Sell orders போட) இந்த account பயன்படும்.
  • Demat Account: நீங்க வாங்குன shares-ஐ Digital format-ல safe-ஆ store பண்ணி வைக்கிறதுக்கான account தான் Demat account. (முன்னாடி எல்லாம் paper certificate-ஆ தருவாங்க, இப்போ எல்லாம் Digital தான்).

இப்போலாம் Zerodha, Groww, Upstox மாதிரியான Stock Brokers-கிட்ட account open பண்ணா, அவங்களே Trading + Demat account ரெண்டையும் சேர்த்து ஒரே account-ஆ open பண்ணி கொடுத்துருவாங்க.

⚖️ Direct Shares vs Mutual Funds

Share market-ல invest பண்ண ரெண்டு வழி இருக்கு. ஒன்னு Direct Stocks (நீங்களே share வாங்குறது). இன்னொன்னு Mutual Funds (Expert-கிட்ட காசை கொடுத்து அவங்களை invest பண்ண சொல்றது).

FeatureDirect Shares (Stocks)Mutual Funds
Knowledge RequiredHigh - நீங்களே கம்பெனியை analyze பண்ணனும்.Low - Expert Fund Manager பாத்துக்குவார்.
Time RequiredHigh - Daily Market watch பண்ணனும்.Low - SIP போட்டுட்டு நிம்மதியா இருக்கலாம்.
Risk LevelVery High - ஒரே கம்பெனில பணம் முடங்கும்.Moderate - பல கம்பெனிகள்ல பிரிச்சு போடுவாங்க (Diversification).
Starting AmountDepends on Share Price (Ex: MRF - ₹1 Lakh+)₹500 / month SIP மூலமா start பண்ணலாம்.
Best ForFull-time Traders & Experienced InvestorsSalaried people, Beginners & Long-term Investors
⚠️ Advice for Beginners

நீங்க Share market-க்கு புதுசு-னா, நேரடியா stock-ல பணத்தை போட்டு இழக்க வேண்டாம். Mutual Funds மூலமா உங்களோட investment journey-ஐ start பண்றது தான் safe & correct-ஆன approach. AMFI guidelines-படியும் beginners-க்கு Mutual Funds தான் best route.

Vignesh Dhayalan
Vignesh Dhayalan
AMFI MFD · ARN: 288927 · EUIN: E543710
Tamil finance educator, Bangalore. AMFI Registered Mutual Fund Distributor. Share Market basics, SIP, Tax planning — free guidance in Tamil & English. Mutual Funds-ல SIP start பண்ணனும்-னா WhatsApp பண்ணுங்க!
WhatsApp Advice — Free
⚠️ Disclaimer: Investments in securities market are subject to market risks, read all the related documents carefully before investing. இந்த article educational purpose மட்டுமே. Stock market-ல் முதலீடு செய்வது அபாயங்களுக்கு உட்பட்டது. SEBI & AMFI rules-ஐ பின்பற்றி நிதானமாக முதலீடு செய்யவும். Vignesh Dhayalan (ARN 288927) is an AMFI Registered MFD.